கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கை, கால்கள் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் விட்டுச் செல்லப்பட்ட இடத்திலும் சடலத்திலும் பதிந்திருந்த கைரேகைகளின் அறிக்கை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கார் மற்றும் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைகள் தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றப் பதிவுப் பிரிவில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் பொருத்தப்படும்.
இதேவேளைஇ எதிர்காலத்தில் தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.