இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களது அதிகாரக் காலம் நிறைவடைந்து, மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த காலமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், தேர்தலை மேலும் தாமதப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தேர்தலை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி, எதிர்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அண்மையில் உச்ச நீதிமன்றில் 2 அடிப்படை உரிமை மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.