சமகால இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிடிபன வடக்கு ஸ்ரீ உத்தரராம விஹாரஸ்த உத்தரதம்ம தர்ம வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச அல்லது அதிநவீன சக்திகளால் தேசத்தை அழிக்கும் நோக்கில் சிறுமிகளுக்கு ‘ஐஸ்’ போதைப்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
