தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலய பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், காரியாலய உத்தியோகத்தரால் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.