Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 மாதங்கள் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட இந்தியக் கடற்படை

2 மாதங்கள் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட இந்தியக் கடற்படை

ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டு சென்னைத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (28) பதிவாகியுள்ளது.

அந்தமான் கடலில் இரண்டு மாதங்களாகத் தத்தளித்த இலங்கை கடற்தொழிலாளர்களையே இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசங்களில் இருந்து மீன்பிடிப்பதற்காகப் படகு ஒன்றில் கடந்த அக்டோபர் மாத ஆரம்பத்தில் சென்ற 4 கடற்தொழிலாளர்களே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. 

இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த கடற்தொழிலாளர்கள் 54 நாட்கள் கடலில் தத்தளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி மருத்துவமளித்த கடற்படையினர், அவர்களைச் சென்னைத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles