Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலை மாணவராக இருப்பதற்கு அதிகபட்ச கால எல்லை

பல்கலை மாணவராக இருப்பதற்கு அதிகபட்ச கால எல்லை

தனிநபருக்கு பல்கலைக்கழக மாணவராக இருப்பதற்கான அதிகபட்ச கால எல்லை சட்டத்தால் நிர்ணயிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் வேறு பல செயற்பாடுகளில் ஈடுபட்டு தமது கல்வியை புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அதிகபட்சம் ஒன்றரை வருடங்கள் படிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்றும், நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை படிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆலோசனைக்குப் பின்னர் இந்த பிரேரணை நாட்டில் சட்டமாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles