செய்திகள்உள்நாட்டுஉணவகத்தின் முன்பாக துப்பாக்கிச்சூடு

உணவகத்தின் முன்பாக துப்பாக்கிச்சூடு

தெவிநுவர, சிம்ஹாசன வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நேற்று (28) இரவு 8.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கந்தர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​ஹோட்டலுக்கு முன்பாக T-56 தோட்டாக்கள் 3 மற்றும் வெற்று தோட்டா உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles