வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு 1000 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் மறுத்துள்ளது.
நேற்றைய (28) அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழுக் கூட்டத்தில், கணக்காய்வாளர் நாயகம் இதனை நிறுவுவதற்கு இவ்வளவு பணம் செலவழித்தும் உரிய மட்டத்தில் செயற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அமைப்பை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் மற்றும் கொடுப்பனவு தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தமக்கு வழங்க மறுப்பது அரசியலமைப்புக்கு முரணானது என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.