Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனாவை பிரித்தானியாவுக்கு அழைக்குமாறு சார்லஸ் மன்னருக்கு கடிதம்

டயனாவை பிரித்தானியாவுக்கு அழைக்குமாறு சார்லஸ் மன்னருக்கு கடிதம்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையிலும், பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

‘எஸ்.எல். தேசய’ யூடியூப் சேனலை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட மற்றும் சிலர் இந்தக் கடிதத்தை இன்று (28) பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்று கையளித்துள்ளனர்.

டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இதில் கலந்துகொண்டார்.

பிரித்தானிய பிரஜையான டயனா கமகே சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு இலங்கை பிரஜை போல் நடித்து அரச பதவிகளை வகித்து தேர்தலில் போட்டியிடுவது இந்நாட்டு சட்டத்துக்கும் எதிரானது. பிரித்தானிய சட்டத்தின்படிஇ சார்லஸ் மன்னன் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட தெரிவித்துள்ளார்.

விசா காலாவதியான டயனா கமகே தற்போது சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles