Friday, July 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம்

ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பாரியளவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் இன்றி தொடர்ச்சியான மின்சார விநியோகம் சாத்தியமில்லை.

எனவே, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின் கட்டணத்தை திருத்தியமைப்பது சிறந்தது என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles