தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று எஸ். பி. திசாநாயக்க MP தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மதுபாவனையற்ற, புகைத்தல் பழக்கமற்ற, காதல் கொள்ளாமை போன்ற விடயங்களுடன் ஒழுக்கமாக செயற்பட்ட அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு என எஸ் பி திசாநாயக்க சபையில் முன்னதாக தெரிவித்தார்.
இதனையிட்டு தமிழர் சமூகம் பெருமை அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் குறிப்பிட்டார்.