Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 கிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை

5 கிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை

5 கிராமுக்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று முதல் இந்த சட்டம் அமுலாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டுஇ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சான்றுரைப்படுத்தினார்.

போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles