Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு25 இலட்ச ரூபா செலவில் தாயின் பிறந்தநாளை கொண்டாடினார் 'பொடி லெசி'?

25 இலட்ச ரூபா செலவில் தாயின் பிறந்தநாளை கொண்டாடினார் ‘பொடி லெசி’?

பாதாள குழு தலைவரான பொடி லெசி தனது தாயாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவும், தமக்கு பிணை கிடைத்ததற்காகவும் அம்பலாங்கொடை ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டதாகவும், இதற்காக 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொடி லெசி தற்போது பூசா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றி இதுவரை சிறையிலிருந்து வெளியே வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பொடி லெசியின் தாயின் பிறந்தநாளுக்கு 15 பவுன் தங்க நகையும் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles