Tuesday, May 20, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதி பாத்திரம் வழங்குவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டம் இன்று (16) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமாகின்றது .

இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் சுமார் 40 வருடங்களாக முன்வைத்த கோரிக்கைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த முன்னோடி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தின்படி, இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் நாடளாவிய ரீதியில் சுமார் 300,000 பேர் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles