Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய கீதத்தை உரக்கப் பாடாத மாணவரை தாக்கிய ஆசிரியர்

தேசிய கீதத்தை உரக்கப் பாடாத மாணவரை தாக்கிய ஆசிரியர்

தேசிய கீதத்தை உரக்கப் பாடாமை காரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அவிசாவளை – ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

இதன்போது உரக்க பாடுமாறு தெரிவித்து குறித்த ஆசிரியர் மாணவர் ஒருவரின் தலையில் தாக்கியதாக பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக மாணவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தற்போது பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles