Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரவு செலவுத் திட்டம் வாசிப்பு

வரவு செலவுத் திட்டம் வாசிப்பு

*வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு. அடுத்த சில ஆண்டுகளில் அரசின் வருவாயை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

*இலங்கையில் சர்வதேச வர்த்தக அலுவலகம் நிறுவப்படும்.

*கடவுச் சீட்டு மற்றும் வீசா கட்டணம் 20% அதிகரிக்கப்படும்.

*ஏழு முதல் எட்டு வீதமான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

*ஏற்றுமதி நோக்கத்தில் மட்டும் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும்.

*தனியார் துறையினருக்கு விசேட காப்புறுதி நிதியம் உருவாக்கப்படும்.

*ICTA ஐ இல்லாது செய்ய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

*சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக 50 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

*சிறுவர்களின் போசாக்குக்காக தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி தங்கக்கூடிய சிகிச்சை அறைகள் உருவாக்கப்படும்.

*வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு வழிப்பாட்டு தலங்களுக்கான சூாிய சக்தி கட்டமைப்புகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

*சிறைச்சாலைகளில் கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.

*பதுளை, குருநாகல், பொலன்னறுவை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக மாற்றப்படும்.

*ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறது. 18 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இது கட்டாயம் இல்லை. விரும்புபவர்கள் மட்டும் வெளியேறலாம்.

*சர்வதேச வர்த்தகத்திலிருந்து இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

*2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles