இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் போதைக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
2022 ஜனவரி முதல் செப்டெம்பர் வரை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களும், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 78 பேரும் உள்ளடக்கப்பட்டுள்னர்.
ஐஸ் போன்ற ஆபத்தான போதைப்பொருட்களுக்கு எதிராக செயற்படுவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை எனவும் அபின் மற்றும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் திருத்த சட்டமூலம் ஜனவரி முதல் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.