Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகர் பதில்

ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகர் பதில்

எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைசார் மேற்பார்வை குழுக்களை செயற்படுத்துவதற்கு அண்மையில் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதன் பிரகாரம் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

அடுத்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வின் பின்னர் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளுக்கு அமைய 17 பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அவற்றுக்கான தலைவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு நேற்று (03) எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

நீண்டகால முறைமை மாற்றங்களை கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் பாராளுமன்றத்தில் தாமதம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles