Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கில் உருவாகும் சஃபாரி

வடக்கில் உருவாகும் சஃபாரி

வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சுற்றுலா சரணாலயத்தை (சஃபாரி) அமைப்பதற்கு பொருத்தமான காணியை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது வடக்கு மாகாணத்தில் தனியான சுற்றுலா சரணாலயம் இல்லை.

பெரும்பாலான சரணாலயங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ளன.

எனவே வடமாகாணத்தின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தெற்கில் உள்ள விலங்கினச்சாலைகளையும், சரணாலயங்களையுமே பார்வையிட வர வேண்டும்.

இதனை கருத்திற்கொண்டு வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சுற்றுலா சரணாலயத்திற்கு பொருத்தமான காணியை தேடுமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles