4 பருவங்களாக மழை பொய்த்து போனதால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியை கென்யா எதிர்கொண்டுள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்களுக்கே அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கால்நடைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள மாடுகள் அனைத்தும் போதிய தீவனமின்றி உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன.