Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்கம் அணிய கட்டுப்பாடு - மீறுவோருக்கு சட்டநடவடிக்கை

தங்கம் அணிய கட்டுப்பாடு – மீறுவோருக்கு சட்டநடவடிக்கை

கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதனால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles