Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுக்கொலை செய்த நபர்களுக்கு உதவிய இளைஞர் கைது!

முக்கொலை செய்த நபர்களுக்கு உதவிய இளைஞர் கைது!

மொரட்டுவையில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ – ஏகொட உயன பகுதியில் வைத்து நேற்று(12) மாலை குறித்த இளைஞன் கல்கிசை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்காக குறித்த இளைஞர் தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இரண்டு சிம் அட்டைகளை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளுக்கமைய, சந்தேகநபர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கைத்தொலைபேசிகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

ஏகொட உயன பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞர் இன்று(13) மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles