இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட 2 தீவிரமான மற்றும் தன்னிச்சையான தீர்மானங்களே நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
வட இலங்கை கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.