Sunday, May 25, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்

மின் உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்

நாட்டில் தற்போதைய நாட்களில் போதிய மழையில்லாத காரணத்தினால் நீர் இருப்பு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 85 சதவீதமாக இருந்த நீர் கையிருப்பு தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்ததன் காரணமாக கிட்டத்தட்ட 80 சதவீத மின்சார உற்பத்திக்காக நீர் பயன்படுத்தப்பட்டதாக பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், தற்போது நீர் அளவு மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீர் இருப்பு இன்னும் குறையும் அபாயம் உள்ளதால், தற்போதுள்ள இருப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

எனவே இந்த நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரியை விரைவில் வழங்குவது அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles