Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடீசல் மோசடியில் ஈடுபட்ட மில்கோ நிறுவனம்

டீசல் மோசடியில் ஈடுபட்ட மில்கோ நிறுவனம்

மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல தொழிற்சாலையில் பாரியளவிலான டீசல் மோசடி இடம்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகவும், தொழிற்சாலைக்கு சொந்தமான 45,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்மை தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் வைக்கப்படுவதாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திலும் இந்த எரிபொருள் மோசடி இடம்பெற்றதா என்பதை கண்டறிய விசாரணை நடத்துமாறும் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles