எதிர்வரும் நான்கு நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என பேலியகொடை மெனிங் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மீன் விலை அதிகரித்து காணப்படுகின்ற போதிலும் எதிர்வரும் காலங்களில் அதன் விலை குறைவடையக் கூடும் என அந்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.