Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலக்கடலை இறக்குமதி இடைநிறுத்தம்

நிலக்கடலை இறக்குமதி இடைநிறுத்தம்

இனிமேல் கடலையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜம்போ வேர்க்கடலை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

எனினும் இப்போது இலங்கையில் ஜம்போ வேர்க்கடலை வகைக்கு மாற்று வகை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜம்போ எனப்படும் மாற்று வகை கடலை இறக்குமதி செய்யப்படும் கடலையை விட தரத்தில் உயர்வானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலையின் ஆண்டுத் தேவை 30,000 மெட்ரிக் டன்களாகும்.

ஆனால் தற்போது நிலக்கடலை உற்பத்தி 64,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles