சீனா நம்பகமான நண்பன் என்றும், இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் சீனாவின் உதவியை நாடுவதாகவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று (16) வந்தடைந்த சீன யுவான் வாங் 5 உளவு கப்பலை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுவான் வாங் 5 கப்பலின் தலைவர் மற்றும் பணியாளர்களை இலங்கைக்கு வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் சரத் வீரசேகர தெரிவித்தார்.