Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி மங்கிபொக்ஸ் சோதனை இலங்கையிலும்

இனி மங்கிபொக்ஸ் சோதனை இலங்கையிலும்

இலங்கையில் மங்கிபொக்ஸ் (Monkeypox) சோதனை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் இதனை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையிலும் மங்கிபொக்ஸ் சோதனை நடத்துவதற்கான பிசிஆர் கருவிகளை கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியது.

இதன்படி இன்று முதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles