கடந்த 4 மாதங்களாக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுகின்ற குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்திக்கின்றனர்
காலிமுகத்திடல் போராட்டத்தை வழி நடத்துகின்ற சர்வகட்சிப் போராளிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவினர் ஏற்கனவே பல எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து கடந்த நாட்களில் கலந்துரையாடல்களை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என அண்மையில் பொலிஸார் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.