இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். இது தொடர்பில் இலங்கையின் நிலவரம் சிறந்த பாடமாக அமையும்.
அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலுவாக இருக்கும் என்று இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நடுத்தர வருமானத்தை கொண்டிருந்த இலங்கையில் சிறுபான்மையினரை கையாள்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் இருந்தன.
இலங்கையில் இருந்த அதிகளான சிறுபான்மையினர் மத்தியில் வேலையில்லா பிரச்சினை எழுந்தபோது, அதனை அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவில்லை. அதனை கையாள்வதில் கவனம் செலுத்தவில்லை.
இதனையடுத்தே அங்கு உள்நாட்டு போர் ஒன்று ஏற்பட்டது என்று ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தியா அதனை பாடமாகக் கொண்டு இந்தியாவில் இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஜனநாயக பண்புகளில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.