எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகள் தற்போது வாராந்தம் 3 நாட்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் அடுத்தவாரம் முதல் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதுடன், அரச பணியாளர்களும் வழமைப்போன்று சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பாடசாலைகளையும் வழமைப்போன்று நடத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.