காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோருக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக 1640 அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கத்தோலிக்க மதகுருமார்கள் கையொப்பமிட்ட இந்த கூட்டறிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.