மேல் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பொது போக்குவரத்துக்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதனை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 29ஆம் திகதியுடன் வரி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் வாகனங்களுக்கு அபராதம் இன்றி மீள அவற்றை புதுப்பிப்பதற்கு இன்று வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த காலஅவகாசம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.