Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த அரசின் திட்டத்தினால் பல மில்லியன் ரூபா நஷ்டமாம்

கடந்த அரசின் திட்டத்தினால் பல மில்லியன் ரூபா நஷ்டமாம்

பிரதான வீதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நீண்டகால தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட இலகுரக ரயில் போக்குவரத்து அமைப்பு வலையமைப்பை நிறுவும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் இதற்காக 5545.63 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் உதவியுடன் 2017 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டத்துக்காக, 2020 ஆம் ஆண்டு வரை JICA நிதியில் இருந்து 4622.45 மில்லியன் ரூபாவும், திறைசேரி ஒதுக்கீட்டில் 923.18 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நடப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, இத்திட்டம் விலை உயர்ந்ததாகவும், செலவு அதிகமாகவும் காணப்பட்டதால், திட்ட அலுவலகத்தை மூடிவிட்டு, திட்டத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நகர்ப்புற அமைச்சு அல்லது போக்குவரத்து அமைச்சிற்கு மாற்ற 2020 அக்டோபர் 06 அன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

இதன் காரணமாக திட்டத்திற்கான செலவு பயனற்ற செலவாக மாறியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles