புதிய ஜனாதிபதிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எண்களால் தனது அரசியல் சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை என்று கூறிய அவர், நாட்டிற்கு வெளியே உள்ள 58 இலட்சம் பேரை பிரதிநிதித்துவப்படுத்தியதே தான் போட்டியிட்டதாக தெரிவித்தார்.
தம்மை நம்பிய அனைத்துக் கட்சிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தனது மரியாதைக்குரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.