எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது.
அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் 5 மாதங்களில் தீர்வு காண முடியும்.
அதுவரை கடினமாக காலமாக அமையும். எவ்வாறாயினும், ஒளியை காணக்கூடிய சுரங்கத்தின் விளிம்பினை அடைந்துள்ளோம்.
எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.