Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவினால் உலகத்திற்கு பாரிய ஆபத்து

சீனாவினால் உலகத்திற்கு பாரிய ஆபத்து

பிரித்தானியாவின் புலனாய்வுப்பிரிவான MI5 மற்றும் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான FBI ஆகியன இணைந்து நேற்றைய தினம் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

சீனா உலகிற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகவும், சீனாவின் தற்போதைய முன்னெடுப்புக்கள் உலகை மற்றுமொரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

MI5 மற்றும் FBI புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகம் தற்போது தொழிநுட்ப உலகமாக மாறிக் கொண்டு இருக்கின்றது.

தொழிநுட்பம் சார்ந்து இயங்கும் ஒரு நிலையை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் நாடுகள் தமக்கிடையில போட்டித் தன்மைகளை உருவாக்கிக் கொண்டும், புதிய தொழிநுட்பங்களை கண்டு பிடித்துக் கொண்டும் இருக்கின்ற சூழலில் சீனா போட்டி உலகத்தை உருவாக்கி அதில் முன்னேற முனைந்து கொண்டு இருக்கின்றது.

சீனா தனது தொழிநுட்ப உளவாளிகளை உலகமெங்கும் அனுப்பி அவர்கள் மூலம் உலகின் தொழிநுட்ப திட்டங்களை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் போலியான தொழிநுட்பங்களை தயாரித்து தொழிநுட்ப போர்களை உருவாக்கம் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதனால் உலகின் முழு கட்டுப்பாட்டையும் சீனா தனது கைகளுக்குள் அடக்க முயற்சித்து வருகின்றது. அத்துடன் சீனா முக்கியமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளையே இலக்கு வைக்கின்றது.

முழு உலகமும் சீனாவின் நிமித்தம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என MI5 மற்றும் FBI வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles