Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு காலப்பகுதியில் அவதிப்படும் நோயாளர்கள்

மின்வெட்டு காலப்பகுதியில் அவதிப்படும் நோயாளர்கள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் போது மின்பிறப்பாக்கி இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் மின் தடைப்படுகின்ற போதிலும் சாவகச்சேரி வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி இயக்கப்படுவதில்லை.

இதனால் நோயாளர்கள், பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டபோது, நோயாளர்கள் அவதிப்படும் வகையில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாது.

இருப்பினும் மின்பிறப்பாக்கிக்கான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் தேவைப்படும் வேளையில் மாத்திரமே மின்பிறப்பாக்கியை இயக்கி வருகிறோம். ஆனால் அதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles