இங்கிலாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின், இலங்கை தொடர்பான பயண நிலைப்பாடுகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் இலங்கைக்கு செல்வதற்கு எதிராக தங்கள் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி மோசமடைதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மைக்கான சாத்தியக்கூறுகள், இதற்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளன.
அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, அயர்லாந்து ஆகியவை, சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளைத் தொடர்ந்து பேணப்படுகின்றன.
எனவே இந்த நிலைப்பாடு, நாட்டில் ஏற்கனவே பின்னடைவைக் கண்டுள்ள சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
