10 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் கையிருப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக நீர்வெறுப்பு நோய்க்கான ரேபிஸ் எனப்படும் தடுப்பூசியும் இவற்றில் உள்ளடங்குவதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், கையிருப்பு நிறைவடையவுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் பொதுவாக அனைத்து வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்படுபவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானவை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.