இவ்வார நாடாளுமன்ற அமர்வுகளை இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என அவைத்தலைவர், அமைச்சர் தினேஸ் குணவா்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.