மரக்கறிகளின் மொத்த விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த சில நாட்களில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய, பல்வேறு மரக்கறிகளின் கிலோவொன்றின் தொகை விலை 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரக்கறிச் செய்கைக்கான எரிபொருள், உரம் மற்றும் விவசாய இரசாயனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் மரக்கறித் தட்டுப்பாடு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.