Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுகத்துவாரம் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்

முகத்துவாரம் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு – முகத்துவாரம் – ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 5 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த இருவரால் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

சம்பவத்தில் கொழும்பு – அளுத்மாவத்தை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.

இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles