அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்காக செலவிடும் நோக்கில் விளையாட்டு துறை அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
