இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஹமட் உவைஸ் நாளை (07) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபன களஞ்சியங்கள் முனையத்தின் தலைவராக இருந்த இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்பதவியிலிருந்து விலகினார்.
மொஹமட் உவைஸ் முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரியின் சகோதரரும் ஆவார்.
