இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், வழமையான எரிபொருள் விநியோகம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.