மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம், CID சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.