Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரியபோல் உருக்கு தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்

மரியபோல் உருக்கு தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்

மரியபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலையின் மீது, ரஷ்யா முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருவதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

ஆலையில் உள்ள மக்களை பாதுகாக்கும் நோக்கில் யுக்ரைனிய படைகள் இரண்டாவது நாளாகவும் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்த நாட்டு பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரியபோல் நகரின் இறுதி இலக்காக கருதப்படும் குறித்த ஆலையினை கைப்பற்றுவதற்கு ரஷ்யா எறிகணை தாக்குதல்களை நடத்தி வருவதுடன், உருக்கு ஆலையின் எல்லைப்பகுதியினை அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.

குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் வரையில் உருக்கு ஆலையின் பதுங்கு குழிகளில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவர்களை மீட்பதற்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்க வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி வொளேடிமிர் செலன்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles