Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய கடன் திட்டத்தின் கீழ் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களில் மேலும் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சலுகை விலையில் விநியோகிப்பதற்காக இதுவரை 80,000 மெட்ரிக் டன் அரிசிஇறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் யோகா பெரேரா தெரிவித்துள்ளார்.

கையிருப்பில் உள்ள அரிசியை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பொன்னி சம்பா 1Kg 175 ரூபாவிற்கும், நாட்டு மற்றும் வெள்ளை அரிசி 1Kg 145 ரூபாவிற்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 300,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles